பொன்மாலை பொழுது.. முன்னணி இயக்குனர்களின் சங்கமம்
Share
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சசி, முருகதாஸ், லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மொன்மாலை பொழுது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்திருக்கும் இந்த நிகழ்வால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.













