LOADING

Type to search

இந்திய அரசியல்

காவேரியில் நீரைப் பெற்றுத் தராவிட்டால் போராட்டம் – ஈபிஎஸ் எச்சரிக்கை

Share

கர்நாடகாவிலிருந்து காவேரியில் நீரைப் பெற்றுத் தராவிட்டால் போராட்டத்தில் களமிறங்குவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பெங்களூருவுக்குச் சென்று காவேரியில் தண்ணீர் திறக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக அணைகளில் 80 சதவீதம் தண்ணீர் இருப்பதால், தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு, தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

காவேரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசியல் காரணங்களுக்காக நழுவும் அம்மாநில காங்கிரஸ் அரசை தட்டிக் கேட்க வேண்டியதும், கண்டிக்க வேண்டியதும், வற்புறுத்தி நம்முடைய பங்கு நீரைப் பெற வேண்டியதும் முதலமைச்சர் ஸ்டாலினின் உரிமையும், பொறுப்புமாகும் என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் கடிதம் எழுதும் போது பகடி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது எடுத்ததற்கெல்லம் கடிதம் எழுதுவதாக சாடியுள்ள அவர், கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவிற்குச் சென்று, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காய்ந்து கொண்டிருக்கும் குறுவை பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.