ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வு
Share
19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 05.08.2023 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமையேற்றார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன் ‘ இரு மகாகவிகள்’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர், அறிவியலாளர் வெ.பொன்ராஜ் ‘ தொழில்நுட்ப வளர்ச்சி ஆக்கத்திற்கா? அழிவிற்கா ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள், வாசகர்கள் எனப் பலதரப்பட்டோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.













