LOADING

Type to search

இந்திய அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூனையை விழுங்க முன்ற 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

Share

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெண்டலிகோடு தாலவிளை நீரோடையில் ஒரு மலைப்பாம்பு, பூனை ஒன்றைப் பிடித்துக் கொண்டு தண்ணீரை கடந்து செல்ல முயன்றது.

இதைப் பார்த்த அந்த பகுதியினர் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் அங்கு சென்று பாம்பை பிடிக்க முயன்ற போது பூனையை விட்டுவிட்டு பாம்பு தப்பிச் செல்ல முயன்றது.

தொடர்ந்து 10 அடி நீளமும் 12 கிலோ எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து குலசேகரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.