LOADING

Type to search

இந்திய அரசியல்

இணையதள விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு – தமிழக அரசு

Share

இணையதள விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
இணையதள சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் இணையதள விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இணையதள விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என்று தெரிவிக்கப்பட்டது.

ரம்மியை நேரில் விளையாடும்போது தான் திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இணையதள ரம்மி விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. இணையதளத்தில் விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரிபார்க்கப்படுகிறது என்று விளக்கப்படவில்லை என்று தமிழக அரசு வாதிட்டது. மேலும், இணையதள விளையாட்டில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. ஒரு பகுதி இணையதள நிறுவனத்துக்கு செல்கிறது. நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும் என்று கூறியது. இந்த நிலையில் இணையதள சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகள் ஆகஸ்ட் 14-ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.