LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆடை சுதந்திரத்தில் எல்லை தாண்ட வேண்டாம்… குஷ்பு பேட்டி..

Share

ஆடை சுதந்திரத்திற்கு ஒரு எல்லை உண்டு என்றும், தனக்கான எல்லை புடவை அணிவது தான் என்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாஜக தேசிய மகளிர் ஆணைய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7 ம் தேதி தேதி அவருடைய நினைவு நாள், காலையிலேயே அவருக்கு வணக்கம் சொல்லி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதை பதிவு செய்துள்ளேன். அவரைப் பற்றி பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம், நான் அங்கிருந்து வந்தவள், அவரைப் பற்றி நன்றாக தெரியும்” என்று தெரிவித்தார்.

கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும் என தெரிவித்த குஷ்பு, கல்லூரி மாணவர்கள் மேற்கத்திய உடைகள் அணிய வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே வேளையில் நமது கலாச்சாரங்களை மறந்துவிட வேண்டாம் என சொல்கின்றேன். ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது, நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை அணிய வேண்டும். எனக்கு புடவை தான் எல்லை” எனத் தெரிவித்தார்.