ரஜினியின் ஜெயிலர் படம் குறித்து தனுஷ்
Share
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் ஜெயிலர் படத்தில் இருந்து வித விதமான பதாகைகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ் தனது பக்கத்தில் ஜெயிலர் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இது ஜெயிலர் வாரம் என்று தெரிவித்துள்ளார்.













