LOADING

Type to search

சினிமா

ரஜினியின் ஜெயிலர் பட வெளியீடு – சென்னை, பெங்களூருவில் விடுமுறை அறிவிக்கும் அலுவலகங்கள்!

Share

ரஜினியின் ஜெயிலர் படம் வரும் 10-ஆம் தேதி வெளியாக உள்ளதை முன்னிட்டு சென்னை மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் சில விடுமுறை அறிவித்து வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உற்சாகமடைந்து, தங்கள் நிறுவனங்களை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள். ரஜினி படம் வெளியாகும் போதெல்லாம் விடுமுறை அளிப்பதை சில நிறுவனங்கள் வாடிக்கையாக வைத்துள்ளன. அந்த வகையில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது.

கடைசியாக வெளிவந்த ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் கலவை விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இதையொட்டி வெளியிடப்பட்ட முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூருவில் செயல்பட்டு வரும் சில நிறுவனங்கள் விடுமுறை அளிக்க தொடங்கியுள்ளன. விடுமுறை அளித்து ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியானதை முன்னிட்டு எங்கள் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கிறோம். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட் வழங்க உள்ளோம் என்று கூறியுள்ளது.