ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார்
Share
மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ராகுல் காந்தியின் 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவிக்கான தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. அவர் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார். வரும் 12, 13-ந்தேதிகளில் வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
முன்னதாக, காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப்பேசினார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.













