LOADING

Type to search

சினிமா

மிரட்டலான தோற்றத்தில் ஷாருக்கான்.. ஜவான் படத்தின் புதிய பதாகை

Share

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து படக்குழு பல பதாகைகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா இடம்பெற்றுள்ள இந்த பதாகை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.