LOADING

Type to search

இந்திய அரசியல்

சிறுமி பாலியல் படுகொலை பற்றி கேள்வி கேட்டதால் பத்திரிகையாளரை கொடூரமாக தாக்கிய மராட்டிய ஆளும் கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்கள்

Share

மராட்டியத்தில் பத்திரிகையாளரை எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கினார்கள்.

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியை தனதாக்கிக்கொண்டார். அத்துடன் பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராகியுள்ளார்.

இந்நிலையில், 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் நீதிகேட்டு சிண்டே சிவசேனா கட்சி அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கிஷோர் பாட்டீல், முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே ஆகியோரிடம் பத்திரிகையாளர் சந்தீப் மகாஜன் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிஷோர் பாட்டீல் தொண்டர்கள் பத்திரிகையாளர் சந்தீப் மகாஜனை கொடூரமாக தாக்கினர். ஸ்கூட்டரில் வந்த அவரை கீழே இழுத்துப்போட்டு காலால் மிதித்து தாக்கும் காட்சிகள் பதைபதைக்க வைத்துள்ளன.