தமிழ்நாட்டின் ஈரோடு நகரில் புத்தகத் திருவிழாவில் நம் தாயகத்தின் தமிழ் அறிஞர் மறைந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் பெயரில் ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ‘உதயன்’ லோகேந்திரலிங்கம்.
Share
கடந்த ஆகஸ்ட் 4ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 15ம் திகதி வரை தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் நம் தாயகத்தின் தமிழ் அறிஞர் மறைந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் பெயரில் ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’. அமைக்கப்பெற்று நடைபெற்ற நூல் அறிமுகவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் சிறப்புரையாற்றினார்..
நம் தாயகத்தின் தமிழறிஞர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பெயரில் படைப்பரங்கம்’ அமைத்த ஈரோடு புத்தகத் திருவிழா நிறுவுனர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் நன்றி!.
இன்றைய நூல்அறிமுக விழாவில் கனடா உதயன் வெளியீடுகளாக வந்துள்ள வீணைமைந்தனின் ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும் மற்றும் பேராசிரியர் சேலம் சங்கர நாராயணன் அவர்களின் பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்’ என்னும் நூலும் அறிமுகம் செய்யப்பெற்றன. அங்கு வருகை தந்திருந்த கல்லூரி மாணவ மாணவிகள் 20 பேருக்கு நூல்கள் இலவசமாக வழங்கப்பெற்றன.
















