LOADING

Type to search

இந்திய அரசியல்

ராகுல் காந்தி இன்று உதகை வருகை

Share

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடியும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தருகிறார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல், அவதூறு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மீண்டும் எம்.பி. பதவியை பெற்ற ராகுல்காந்தி, மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் உரையாற்றினார். இந்நிலையில், தமது வயநாடு தொகுதிக்குச் செல்லும் ராகுல் காந்தி, டில்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்லவுள்ளார்.
மதிய உணவுக்கு பின், முத்தநாடு மந்து எனும் தோடர் பழங்குடி கிராமத்துக்கு சென்று அம்மக்களோடு கலந்துரையாடிய பின், கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார். இந்த பயணத்தில் ‘எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் -பெள்ளி தம்பதியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.