LOADING

Type to search

இந்திய அரசியல்

அச்சரப்பாக்கம் ஸ்ரீமரகத தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

Share

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே அமைந்துள்ள ஸ்ரீமரகத தண்டாயுதபாணி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி எனும் பெருக்கருணை கிராமத்தில் உள்ள ஸ்ரீமரகத தண்டாயுதபாணி கோயிலில் 39 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை விழாவையொட்டி 108 பால் குடங்கள் ஏந்தி கிரிவலம் வந்தனர். அதன் பின்னர் மலையேறிஸ்ரீ மரகதண்டாயுதபாணிக்கு 108 பால் குடங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீ ஆறுமுக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. வீணை, பரதநாட்டிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.