LOADING

Type to search

இந்திய அரசியல்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு புதிதாக அன்னதான கூடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Share

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 80 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில்களில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகம், தடுப்புச் சுவர்கள், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், உணவருந்தும் கூடம், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரி ஆய்வகங்கள் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அந்த வகையில் சென்னை-திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோவில் சார்பில் 8.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் கட்டும் பணி, நாகப்பட்டினம் மாவட்டம்-சிக்கல், நவநீதேஸ்வர சுவாமி கோவிலில் 1.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி, கிருஷ்ணகிரி மாவட்டம்-ஓசூர், காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் கோவிலில் 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மலர் வணிக வளாகம் கட்டும் பணி, திண்டுக்கல் மாவட்டம்-பழனி, பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 5.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகங்கள் கட்டும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம்-தேக்கம்பட்டி, வனபத்ர காளியம்மன் கோவிலில், 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்று பிரகார மண்டபம், நடைபாதை மண்டபம், சுற்றுச்சுவர் மற்றும் முடிகாணிக்கை மண்டபம் அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் கலந்து கொண்டனர்.