ரூ.3.16 கோடி செலவில் சிறுவாபுரி கோவிலில் திருக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் ஆன்மீக நூல் விற்பனை நிலையம்
Share
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடியற்காலை முதல் இரவு வரையில் வந்து நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை பக்தியுடன் வணங்குவர்.
இதனால் பக்தர்களுக்கு வீடு,நிலம், திருமணம், பிள்ளை பேரு, உத்தியோகம் உள்ளிட்டவை சிறப்பாக அமைவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், இக்கோவிலில் உள்ள திருக்குளத்தை ரூ.3.14கோடி செலவில் சீரமைக்கும் பணியை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். இந்நிலையில், அதனை வரவேற்கும் வகையிலும்,ரூ.2.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆன்மீக நூல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் என மொத்தம் ரூ.3 கோடியே 16 லட்சத்து 30 ஆயிரம் செலவிலான வளர்ச்சிப் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.













