LOADING

Type to search

இந்திய அரசியல்

நடப்பாண்டில் 55 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதல்வர் ஸ்டாலின்

Share

நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நாட்டின் 77 வது சுதந்திர தின விழா இன்றும் நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் காண்போர் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. இந்த நிலையில் சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின விழா சிறப்பு உரையாற்றினார். முதல்மைச்சர் தனது உரையில், திட்டங்கள் இல்லாத நாளே இல்லை என சொல்லக்கூடிய வகையில் அரசு அறிவிக்கும் திட்டங்களை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கின்ற பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஆட்சி சக்கரம் சுழல்வதற்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள். அந்த சக்கரம் வேகமாக சுழல்வதும், மெதுவாக சுழல்வதும் அரசு ஊழியர்களின் கைகளில்தான் உள்ளது. அந்தக் கைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

அப்போதுதான் வேகம் அதிகமாகும் என்பதை எப்போதும் உணர்ந்திருப்பது திராவிட மாடல் அரசு. எனவே, நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்குமான அரசு என்பதன் அடையாளமாக இதுபோன்ற திட்டங்களைச் சிந்தித்து சிந்தித்து செயல்படுத்தி வருகிறோம்” என்று கூறினார். மேலும், ஓலா, ஊபர், ஸ்விகி, சோமோட்டா போன்ற கிக் பொருளாதார ஊழியர்களின் ஓட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.