“மகளிர் கட்டணமில்லா பேருந்துகள், இனி ‘விடியல் பயணம்’ என அழைக்கப்படும்!” – முதல்வர் ஸ்டாலின்!
Share
மகளிரின் கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்துக்கு “விடியல் பயணம்” என பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், “விடியல் தரப் போகிறோம் என சொல்லி ஆட்சிக்கு வந்தோம். அதற்கு அடையாளமாக தொடங்கப்பட்டது ‘மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி’ திட்டம். இத்திட்டம், கோடிக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார விடியலை கொடுத்துள்ளது.
அதன் அடையாளமாக இந்த திட்டத்துக்கு “விடியல் திட்டம்” என பெயர் சூட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 314 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்” என தெரிவித்தார்.













