மிகவிரைவில் வெண்திரைக்கு வரவுள்ள ‘கனடா ஆரபி’ படைப்பகத்தின் தயாரிப்பான ‘Finder’ திரைப்படம்
Share
மிகவிரைவில் வெண்திரைக்கு வரவுள்ள கனடா ஆரபி படைப்பக உரிமையாளர் நண்பர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பான ‘Finder’ திரைப்படம் ஒரு நேரத்தில் இலங்கை இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் திரையுடப்படவுள்ளது என திரைப்படத்தின் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் சென்னையில் தெரிவித்தார்.
சென்னையில் அமைந்துள்ள திரைப் படங்கள் தொடர்பான பல இறுதிக் கட்ட வேலைகளைச் செய்யவல்ல ஒரு கலையகத்திற்கு கனடா உதயன் குழுவினராகிய நாம் சென்றபோது இயக்குனர் வினேத் எம்மிடம் இந்த திரைப்படம் தொடர்பான பல முக்கிய செய்திகளை தெரிவித்தார்.
அந்த ‘கலையகத்தில் தான் ‘Finder’ திரைப்படத்திற்கான இறுதிக் கட்ட வேலைகளைச் செய்கின்றனர்.
அப்போது திரு சஜீவ் அவர்கள் அலுவலகத்தில் இல்லா விட்டாலும் இயக்குனர் வினோத் கனடா உதயன் குழுவினருக்கும் தேவையான விபரங்களை சமர்ப்பித்தனர். திரைப்படத்திற்கு வரண்ம் கொடுத்தல் மற்றும் சில தொழில் நுட்பப் பணிக்கு முக்கியத்துவம் கோடுத்தல் ஆகியவற்றைப் பற்றி தகவல்களை தெரிவிததார் இயக்குனர் வினோத் இராஜேந்திரன்.
மேலும் கனடா வாழ் தயாரிப்பாளர் ஒருவரின் இந்த திரைப்படமான விரைவில் புலம் பெயர் தமிழ் மக்களை கவரும் வகையில் பல திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன எனவும் தெரிவித்தார் இயக்குனர் வினோத் இராஜேந்திரன்..













