“மீனவர் பிரச்னைக்கு கட்சத் தீவை மீட்பதே தீர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Share
மீனவர் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து ராமநாதபுரம் மண்டபத்தில் நடத்தும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மீன்வளம், வருவாய்த்துறை, சிறுகுறு தொழில்துறை, கூட்டுறவு, மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் கீழ் 13,244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். மாநாட்டில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீன் பிடி தொழிலில் இந்தியாவில் 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு.
கடலோரத்தில் வாழும் தமிழனின் கண்ணீரால் கடல் நீர் உப்பாக இருக்கிறது. மீனவர்களுக்கு மீனவர் நல வாரியம், தடைக்கால நிவாரணம், மானிய விலையில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இரண்டு ஆண்டுகளில் மீனவர் நலன் சார்ந்து நிறைய திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம். காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு தினசரி வழங்கும் உதவி தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தடைக்கால நிவாரண உதவி மூலம் 1.50 லட்சம் குடும்பம் பயன். கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிக்க கடல்பாசி வளர்ப்பு மிதவை, கயிறுகள் 1.42 கோடியில் வழங்கப்பட்டுள்ளன. கடலில் மிதவை கூண்டுகள் அமைக்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. இறால் வளர்ப்பை ஊக்குவிக்க 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு. உள்நாட்டு மீன் வளத்தை பெருக்க ஏராளமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடல் சார் படிப்புகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீனவர் நல வாரியம் மூலம் 12 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 42 திட்டங்கள் 431 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.ரூ. 88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மீனவர் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு, அதனால் உடனடியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.













