LOADING

Type to search

சினிமா

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின்

Share

‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து பிரபலமான நடிகர் கவின் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது காட்சியில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான ‘லிஃப்ட்’, ‘டாடா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இவர் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் அவர்களது திருமணம் நடந்துள்ளது. திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் நடிகர் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நகைச்சுவை நடிகர் புகழ் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். ரசிகர்களும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.