இந்தியாவில் வசூலில் அதிரடிகாட்டிய ஓப்பன்ஹெய்மர்
Share
அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.













