அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் ரஜினி தரிசனம்
Share
உத்தரப்பிரதேசப் பயணத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு சென்று ராமர் கோயிலில் தரிசனம் செய்தார். மனைவி லதாவுடன் இரவு லக்னோவிற்கு திரும்பிய அவர் மேலும் ஒருநாள் அங்கு தங்குகிறார்.
நடிகர் ரஜினிகாந்த், நேற்று இன்று (ஆக 20)அயோத்தி வந்தார். தனது மனைவி லதாவுடன் வந்தவரை அயோத்தி பகுதியின் ஆணையரான கவுரவ் தயாள், காவல்துறை ஐஜி பிரவின் குமார் மற்றும் முனிசிபல் ஆணையரான விஷால் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
இங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவி லில் தரிசனம் செய்தவருக்கு சிறப்பு பூசை நடத்தப்பட்டது. பிறகு ராமர் கோவி ல் கட்டிடங்களை அவர் சுற்றிப் பார்த்தார். ராமர் கோவி லின் தலைமை பூசாரியான ஆச்சாரியா சத்யேந்தர் தாஸ், ரஜினிக்கு ராமர் கோவி லைப் போன்ற சிற்பத்தை பரிசாக அளித்தார். பிறகு மனைவியுடன் லக்னோ திரும்பும் முன் செய்தியாளர்களிடம் ரஜினி பேசினார்.
அப்போது அவர், ‘அயோத்தி ராமரை தரிசிப்பதற்காக நான் பல் அவருடங்களாக காத்திருந்தேன். இன்றுதான் எனது வேண்டுதல் பூர்த்தியாகி உள்ளது. கடவுள் விரும்பினார் நான் ராமர் கோவி ல் கட்டி முடித்த பின் கு மீண்டும் வருவேன்.’ எனத் தெரிவித்தார்.
ராமர் கோவி லுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் அதற்கு முன் இருக்கும் அனுமர் மடத்தின் கோவி லுக்கும் சென்று அனுமரை தரிசித்தார். இங்கு செய்தியாளர்களிடம் பேசிய அ வர். இதற்காக நான் பாக்கியசாலியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மாலை லக்னோவிற்கு திரும்பியவர் இரவும் அங்கு தங்கினார். இந்திய ராணுவத்தின் சில முக்கிய அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார். அதன் பிறகு அவர் சென்னை திரும்புகிறார்.













