புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு
Share
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023 ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.













