தாம்பரம் – கொச்சுவேலி இடையே நெல்லை வழியாக ஓணம் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
Share
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொச்சிவேலி தாம்பரம் இடையே சிறப்பு ரயிலை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் நெல்லை வழியாக இயக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாம்பரத்தில் இருந்து வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண்.06047) செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு மறுநாள் காலை 4 மணிக்கு வந்து சேருகிறது. பிறகு நெல்லையிலிருந்து 4:05 மணிக்கு புறப்பட்டு வள்ளியூருக்கு 4: 42 மணிக்கு நாகர்கோவில் டவுனுக்கு 5: 27 மணிக்கு திருவனந்தபுரம் வழியாக கொச்சிவேலிக்கு காலை 8 மணிக்கு போய் சேருகிறது.
மறு மார்க்கமாக வரும் 27ம் தேதி காலை 11:40 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06048) அதே மார்க்கத்தில் நெல்லைக்கு பிற்பகல் 3:10 மணிக்கு வந்து செல்கிறது. பின்னர் நெல்லையில் இருந்து 3:15 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 2:45 மணிக்கு போய் சேருகிறது. இந்த ரயிலுக்கான முன் பதிவுகள் தொடங்கியுள்ளன.













