LOADING

Type to search

இந்திய அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களை உருவாக்க வேண்டும் – பாரிவேந்தர் எம்.பி.

Share

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர்.பாரிவேந்தரின் 84-வது பிறந்தநாள் விழா காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பாரிவேந்தர் எம்.பிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். பின்னர் பாரிவேந்தர் எம்.பி. பேசியதாவது: பணம் கொடுத்து அழைப்பது அல்ல கூட்டம் தானாக விரும்பி வரவேண்டும்.

எனக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நூற்றுக்கு நூறு விருப்பம் இல்லை. எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஐ.ஜே.வுக்காக உழைக்கும் தம்பிகளுக்காக தேர்தலில் நிற்க விருப்பம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏக்களை உருவாக்க வேண்டும். நாடாளுமன்ற தொகுதிக்கு 6 சட்டப்பேரவை தொகுதி என்பதால் ஐ.ஜே.க.வினரை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.