ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து
Share
ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று தெரிவித்து உள்ளார்.













