சசிகலாவுக்கு பிடிஆணை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Share
சசிகலா இளவரசி இருவருக்கும் பிடிஆணை பிறப்பித்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் இளவரசி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை பெற்றதாக சிறைத்துறை காவல்துறை ஆய்வாளர் ரூபா பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
இதுதொடர்பான காணொளி காட்சிகள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு சசிகலா, இளவரசி இருவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து சசிகலா இளவரசி இருவருக்கும் பிடிஆணை பிறப்பித்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா இளவரசி இருவரையும் கைது செய்து அக்டோபர் 5- தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.













