இசையமைப்பாளர் அனிருத்துக்கு கார் பரிசளித்த கலாநிதி மாறன்!
Share
ஜெயிலர் திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு காரை பரிசாக வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் ரஜினிக்கு கார் பரிசளித்திருந்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். போலவே இயக்குநர் நெல்சனுக்கும் கார் பரிசளித்திருந்தார் அவர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் அவர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.













