‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரதம்’ என்று மாற்ற திட்டம் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு முடிவு
Share
வரும் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் நம் நாட்டின் இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழ் குடியரசுத் தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘இந்தியாவின் குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பாரதத்தின் குடியரசுத் தலைவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக சில பாஜக ஆதரவு அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவும் பாரத் என பெயர் மாற்றம் செய்ய முஸ்தீபுகளில் உள்ள நிலையில் எதிர்கட்சிகள் இந்த பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்திருக்கின்றன.
இந்தியா கூட்டணி ஏற்படுத்திய அச்சம்
சமீபத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “இந்தியா” கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதிலிருந்து ‘இந்தியா’ என்ற பெயர் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில்தான் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழ் குடியரசு தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா என்ற நமது நாட்டின் பெயரை பாரதம் என மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் முதல்வர்
ஏற்கனவே, தனது டுவிட்டர் முகப்பு பக்கத்தில் இந்தியா என இருந்ததை பாரத் என மாற்றியுள்ளார், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. பாரத் என அழைப்பதில் பெருமை கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா என சொல்வதை விட பாரதம் என்று அழைப்பதே சரியானது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் இந்தியா என்ற சொல்லைத் தவிர்த்து பாரதம் என குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், வலிமையான, திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி













