LOADING

Type to search

இந்திய அரசியல்

‘2024ல் ராகுல் காந்தி பிரதமர் ஆவார்’ கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் நம்பிக்கை

Share

கன்னியாகுமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ‘ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை’ ஓராண்டு நிறைவு பேரணி குளச்சல் பீச் சந்திப்பில் நடந்தது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா தலைமையில் விஜய் வசந்த் எம்.பி பேரணியை தொடங்கி வைத்தார். குளச்சல் கடற்கரை சந்திப்பில் தொடங்கிய பேரணி பெரிய பள்ளி முக்கு சந்திப்பு, பள்ளி ரோடு, பயணியர் விடுதி சந்திப்பு, குளச்சல் அரசு மருத்துவமனை வழியாக காமராஜர் பஸ் ஸ்டாண்ட் சென்றடைந்தது. அங்கு விஜய் வசந்த் எம்.பி பேரணியை முடித்து வைத்து பேசியதாவது :

ஏழை எளிய உழைக்கும் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒலிக்க செய்தார். நாட்டு மக்களுக்காக அவர் இன்னும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். வரும் 2024 ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார். அதற்கு நீங்கள் தொடர்ந்து காங்கிரசை ஆதரிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.