செப்டம்பர் 13-ம் தேதி மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர்
Share
மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம் வருகிற செப்டம்பர் 13- ஆம் தேதி நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மாதந்தோறும் நடத்த கூடிய மனுநீதி நாள் முகாம் மதுராந்தகம் வட்டம், நெட்ரம்பாக்கம் கிராமத்தில் வருகிற 13ஆம் தேதி (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.













