LOADING

Type to search

இந்திய அரசியல்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Share

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். திருவள்ளூர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 108 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 69 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 50 மனுக்களும், பசுமை வீடு அடிப்படை வசதிகள் வேண்டி 71 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 93 மனுக்களும் என மொத்தம் 391 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.