LOADING

Type to search

இந்திய அரசியல்

மத்தியப் பிரதேசத்தில் இரு சமூகம் இடையே துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு

Share

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.