கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவு – குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி
Share
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், அநேக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 -ஐ செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதற் கட்டமாகவும் மற்றும் 05.08.2023 முதல் 16.08.2023 வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்திட அட்டவணை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், ஆகஸ்ட் மாதம் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50ஆயிரம் பயணாளர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50ஆயிரம் பயணாளர்கள் பயனாளிகள் இருப்பதால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இன்று காலை முதலே பணம் அனுப்பப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்று காலை 10 மணிக்கு முன்பாக அனைத்து பயனாளர்களுக்கும் ரூ,1,000 ரூபாய் அனுப்பப்பட்டுவிடும் என்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தங்கள் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டதால் பெண் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.













