LOADING

Type to search

இந்திய அரசியல்

தி.நகர் சத்யா வீட்டில் சொத்து வங்கி ஆவணங்கள் சிக்கியது – லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடவடிக்கை

Share

தி.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். தனது பதவிக்காலத்தில் அவர் ரூ.2.64 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வடபழனியில் உள்ள தி.நகர் சத்யாவின் வீடு, மற்றும் அவரது நண்பரான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேசின் வீடு உள்பட 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தினர். நேற்று சோதனையில் தி.நகர் சத்யா தனது பெயரிலும் மனைவி மற்றும் மகள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு காவல்துறை தி.நகர் சத்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறை தி.நகர் சத்யா மற்றும் அவரது உறவினர்கள், அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தி.நகர் சத்யா சென்னை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கும்மிடிப்பூண்டி, ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் சொத்துக்களை வாங்கி இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஏராளமான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களும் தி.நகர் சத்யாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறும் போது, தி.நகர் சத்யாவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்திருக்கும் சொத்து ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவின் படி தி.நகர் சத்யா மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவும் காவல்துறை முடிவு செய்துள்ளனர்.