கார்த்திக் நடிக்கும் ஜப்பான் படத்தின் புதிய பதிவேற்றம்
Share
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் பதாகை மற்றும் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் புதிய பதிவேற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் பின்னணி குரல் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த காணொளியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, “சத்தம் மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி” என்று பதிவிட்டுள்ளார்.













