LOADING

Type to search

இந்திய அரசியல்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை,

Share

01.09.2023 திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி விழா. 02.09.2023 செவ்வாய் கிழமை பஞ்சமி விழா.

03.09.2023 புதன் கிழமை சஷ்டி விழா

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புரட்டாசி மாதம் 1ம் தேதி 18.9.2023, திங்கள் கிழமை காலை 10 மணிக்கு , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 27 நட்சத்திரங்களுக்கு, 12 ராசிகளுக்கு ,9 நவக்கிரகங்களுக்கு என மொத்தம் 48 மண்டலங்களுக்கும் விருட்சங்கள் அமைத்து காலச்சக்கரம் என்ற பெயரில் அமைந்துள்ள செடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து அஷ்டதிரவியங்கள் மற்றும் விளாம்பழம், மோதகம், அப்பம், சக்கரைப் பொங்கல், சுண்டல் போன்ற விநாயகருக்கு பிடித்த விசேஷப்பொருட்களுடன் அருகம்பில்,கரும்பு.

வெள்ளெருக்கம் வேர் மற்றும் பல வகையான அற்புத மூலிகைகளைக் கொண்டு மஹா கணபதி ஹோமமும் தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் ஹோமங்களுடன் நடைபெறும் காலச்சக்கர பூஜையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்கின்றனர் தன்வந்திரி குடும்பத்தினர்.

தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி விநாயகரின் சிறப்புகள்

தன்வந்திரி பீடத்தில் மட்டுமே உலகில் வேறெங்கும் காணாத வகையில் அமர்ந்த கோலத்தில், 4 அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் இராஜ பரிபாலனம் செய்யும் வகையில் ஒரே கல்லில் வடக்கு நோக்கி தன்வந்திரி பெருமாளும். தெற்கு நோக்கி விநாயகர் பெருமாளும் அமர்ந்து பக்தர்களுக்கு கர்ம வினை நீங்கும் விதத்திலும். கர்மப்பிணி போக்கும் விதத்திலும் திரு காட்சி தருகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி விநாயகரை விநாயகர் சதுர்த்தி அன்று தரிசித்து பலன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

மஹா கணபதி ஹோம பலன்கள்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் கணபதி ஹோமங்கள் மூலம் நட்சத்திர, நவக்கிரக தோஷங்கள் மற்றும் 12 ராசிகளில் ஏற்படும் அசுப பலன்கள் குறைந்து சுப பலன்கள் ஏற்படும் மேலும் கெட்ட சக்திகளை அழித்து நன்மை தரும், குழந்தைப்பேறு கிடைக்கும், அனைத்து விதமான தடைகள் நீங்கி விரைவில் திருமணம், தொழில், வியாபாரம், விவசாயம் , உத்தியோகம் போன்றவைகள் நல்ல முறையில் அமைந்து குடும்ப சுபிட்சத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் மஹா கணபதியின் பரிபூரண அருளால் கர்ம வினைகள் நீங்கி நல்லபுத்தி, ஞானம் கிடைக்கும், புண்ணியம் உண்டாகும், வீட்டில் தானியம் பெருகும், நவக்கிரக தோஷங்கள் , மனக்கவலைகள் விலகும், பொன்,பொருள் சேர்க்கையும், செயல்களில் வெற்றியும் ஏற்படும், நோய்கள் குணமாகும்.எனவே பொதுமக்கள், பக்தர்கள் இந்த ஹோமங்களில் பங்கு பெற்று , விநாயகர் தன்வந்திரி ஆசியுடன் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியும் ஒரு சேர பெற்று நலம் பல பெறலாம்.இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு நல்லெண்ணெய், சீயக்காய் து|ள், கதம்பப்பொடி, பால், தயிர், கரும்பு சாறு, பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற 12 விதமான அபிஷேக திரவியங்களைக்காண்டு சிறப்பு அபிஷேகமும்

27 நட்சத்திரங்கள்,9 நவக்கிரகங்கள்,12ராசிகளுக்குரிய விருட்சங்களுக்கு கலச பூஜையும், சிறப்பு ப்ரார்த்தனையும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.