LOADING

Type to search

இந்திய அரசியல்

கனடா வர்த்தகத்துறை அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ஒத்திவைப்பு

Share

ஜி20 மாநாட்டின் போது கனடா பிரதமர் ட்ரூடோ விமானத்தில் கோளாறு ஏற்பட்ட காரணத்தால், நாடு திரும்புவதில் பிரச்னை ஏற்பட்டது. கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மெரியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டில்லியில் கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவும் வந்திருந்தார். ஆனால், அவர் 10ம் தேதி நடந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை. அதேவேளை, ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வருவதாகவும் இது தொடர்பாக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார். காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து ஜி20 மாநாட்டை நிறைவு செய்த பின் பிற நாடுகளின் தலைவர்கள் சொந்த நாடு சென்ற நிலையில் விமான கோளாறு காரணமாக ட்ரூடோ கனடா செல்வதில் கால தாமதம் ஏற்பட்டது. திட்டமிட்ட காலத்தை கடந்து அவர் 2 நாட்கள் கழித்து இந்தியாவில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில், கனடா வர்த்தக்கத்துறை அமைச்சரின் இந்திய வருகை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.