சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நெல்லை காவல்துறை!
Share
சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி.மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன் அவர்கள், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன்.ரகு, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன், மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் சமூக நீதி நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.













