LOADING

Type to search

இந்திய அரசியல்

மானாமதுரையில் தனியாக இருந்த பெண்ணை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

Share

மானாமதுரையில் தனியாக இருந்த பெண்ணை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல் செல்லும் சாலையில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. அங்கு, ஒடிசாவை சேர்ந்த பெண் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், செங்கல் சூளையில் தனியாக இருந்த பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியன் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ஆதி என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தெற்கூர் கிராமத்தை சேர்ந்த 4 பேருக்கு இதில் தொடர்புள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கூடுதல் காவல்துறை கண்கணிப்பாளர் நமச்சிவாயம், மானாமதுரை காவல்துறை கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மானாமதுரையில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.