LOADING

Type to search

இந்திய அரசியல்

இரு பெண்களால் நான் 13 வருடம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன் – சீமான்

Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல்துறை 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகவில்லை. இதற்கிடையே திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான வழக்கை திரும்ப பெற்றார். இருந்தாலும் வளசரவாக்கம் காவல்துறை விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.

ஆஜராகியபின், வெளியில் வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2012-ம் ஆண்டு ஏற்கனவே வழக்கை திரும்பப் பெற்றிருந்தார். தற்போது மீண்டும் திரும்பப் பெற்றுள்ளார். 9-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தார்கள். வர முடியாது எனத் தெரிவித்தேன். அதன்பிறகு இன்றைய தினம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மன் அனுப்பி வரவில்லை என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதால் நேரில் ஆஜராகினேன். நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையா… பணம் கொடுக்கப்பட்டதா, நகை கொடுக்கப்பட்டதா? என கேள்வி கேட்டகப்பட்டது. ஒன்னும் கொடுக்கல…. என்றேன் இந்த பெண்களால் நான் 13 வருடம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். நான், எனது குடும்பம், என்னைச் சார்ந்து இருக்கும் லட்சக்கணக்கானோர் பட்ட கஷ்டம்.

ஒரு பெண், இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஒருவரை வன்கொடுமை செய்வதை விட கொடுமை உள்ளதா?. எனது மனைவி ஆஜராகுவதாக தெரிவித்தார். அதனால் அழைத்து வந்தேன். என்னுடைய மவுனத்தில் அதிகமாக பொய் பேசிவிட்டீர்கள். திருமணம், கருக்கலைப்பு எனக் கூறுகிறார்கள். அதற்கான ஆதாரம் உள்ளதா?. எனது திருமணம் 2013-ல் நடைபெற்றது. அப்போது ஆதாரத்தை காட்டி நிறுத்தியிருக்கலாமே?. 8 முறை கருக்கலைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. வீரலட்சுமி போன்றோருக்கு மன்னிப்பு கிடையாது, பொது மன்னிப்பு கேட்கனும். என்னை அசிங்கப்படுத்தும் நபர்களுக்கும் சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.