LOADING

Type to search

இந்திய அரசியல்

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு.

Share

நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் உணவகம் இயங்கி வந்தது. இந்த உணவகத்தில் இருந்து சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலையில் சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் உணவகத்துக்கு சென்று சவர்மா உள்ளிட்ட உணவு வகைகளை பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டனர். அதன் பிறகு மாணவி கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி (12), உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் உணவகத்தில் என்ன உணவை சாப்பிட்டார்கள் என கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உமா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதைத்தொடர்ந்து உணவகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்து, கடைக்கு அறிக்கை வழங்கி ‘முத்திரை வைக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உமா உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உணவுப் பொருட்களை அழித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘முத்திரை’ வைத்தனர்.