மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்
Share
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோவில் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இதில் மேலே அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும், கீழே அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.













