LOADING

Type to search

இந்திய அரசியல்

கிறிஸ்தவ பாதிரியார் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டுடன் சபரிமலையில் சாமி தரிசனம்

Share

திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(50) ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க தீர்மானித்தார்.

அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் மாலை அணிந்து கடந்த மாதம் முதல் விரதத்தை தொடங்கினார். தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து கோவிலில் தரிசனம் செய்தார். இந்து மதத்தை ஆழ்ந்து தெரிந்து கொள்வது மட்டும்தான் தனது நோக்கம் என்றும் மதம் மாறும் எண்ணம் இல்லை என்றும் பாரதியார் மனோஜ் கூறினார்.

இந்து மதம் மட்டுமல்லாமல் பிற மதங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக கூறினார். இதற்கிடையே பாதிரியார் மனோஜ் மீது ஆங்கிலிக்கன் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சர்ச்சில் திருப்பலி

உள்பட சடங்குகள் நடத்த அவருக்கு தடை விதித்துள்ளது. இது தவிர அவருக்கு வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

ஆனாலும், சபரிமலை செல்லும் முடிவில் இருந்து தான் பின்வாங்க போவதில்லை என்று பாதிரியார் மனோஜ் கூறினார். இந்த நிலையில் 41 நாள் விரதம் இருந்த பாரதியார் மனோஜ் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்திலிருந்து சபரிமலைக்கு புறப்பட்டார். முன்னதாக திருவனந்தபுரம் திருமலையில் உள்ள மகாதேவர் கோவிலில் இருமுடி கட்டினார்.

அவருடன் மேலும் 5 பேரும் இருமுடி கட்டி அங்கிருந்து சபரிமலை புறப்பட்டனர். வழியில் சிவகிரி வந்தாலும் எரிமேலியில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் சன்னிதானத்தை அடைந்தார். தொடர்ந்து 18-ம் படி ஏறி நீண்ட நேரம் ஐயப்பனை தரிசனம் செய்தார். பாதிரியார் மனோஜ்க்கு திருவிதாங்கோடு தேவஸ்வம் போர்டு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சபரிமலை கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைபுரம் கோவில் மேல் சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்தனர். மாளிகைபுரம் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் பாரதியார் மனோஜ் ஊர் திரும்பினார். இது குறித்து அவர் கூறியது: சபரிமலை பயணம் மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. உள்ளே இருக்கும் தெய்வத்தை மனதாலும் உடலாலும் தரிசனம் செய்தது எனக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பூரிப்பை தந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.