LOADING

Type to search

இந்திய அரசியல்

நாமக்கல் குமாரபாளையத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

Share

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தூய்மையே சேவை மற்றும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேவை மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது இடங்கள், மலைவாழ் பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நகரங்களின் தூய்மையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதென உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் குமாரபாளையம் நகர பேருந்து நிலையத்திலிருந்து சேலம் பிரதான சாலை வழியாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் காவேரி ஆற்றின் கரையோரம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.