LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Share

ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. ஒராண்டு ஆகியும் இழப்பீடு கிடைக்காததால் ஆட்சியர் மற்றும் உள்துறை செயலாளரிடம் சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை இல்லாததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இவ்வளவு காலதாமதம் ஏன் என கேள்வி எழுப்பியதுடன், உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், இழப்பீட்டு தொகையை 6 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.