LOADING

Type to search

சினிமா

இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி?

Share

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. இவரது இயக்கத்தில் ஆர்யா – நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. காதல் எமோஷன் ஜேனரில் வெளியாகி கமர்சியல் ரீதியிலும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் அட்லீக்கு அடுத்தடுத்து மிகப்பெரும் வாய்ப்புகளை பெற்று தந்தது. அடுத்ததாக உச்ச நட்சத்திரம் விஜய்யை வைத்து தெறி படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மெர்சல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்ததால் அட்லி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

தொடர்ந்து 3-ஆவது முறையாக விஜய் இயக்குனர் அட்லி இணைந்தார். இந்த காம்போவில் வெளிவந்த பிகில் படத்தில் விஜய் நயன்தாரா நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் அவர் எடுத்த 4 திரைப்படங்களும் முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்களின் கலவை என்று விமர்சனங்கள் எழுந்தன. ஒவ்வொரு சூப்பர் ஹிட் படத்திலும் ஒவ்வொரு சிறந்த காட்சிகளை உருவி அதை புதிய படத்தில் அட்லி இணைத்து விடுகிறார் என்று அவரது எதிர்பாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மூலமாக அட்லி இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படம் தற்போது ரூ. 1000 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிரடியான படம் ஹிந்தியில் வெளியாகி இருப்பதால் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீக்கு இந்தி திரையரங்கில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அவரும் தான் சல்மான்கான், ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியிருந்தார். சமீபத்தில் வெளியான தகவலின் படி ஷாரூக்கானை வைத்து அட்லி அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யும் நடிக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 37 வயதாகும் அட்லி ஜவான் படத்திற்காக ரூ. 30 கோடி வரையில் சம்பளமாக வாங்கியிருக்கக் கூடும் என்று இந்தி திரையுலகில் பேசப்படுகிறது. அட்லியுடைய சொத்து மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் வர இருக்கலாம் என்று கருதப்படுகிறது.