LOADING

Type to search

இந்திய அரசியல்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை – ஜெயக்குமார் திட்டவட்டம்

Share

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று கடந்த 18-ம் தேதி முடிவெடுத்து அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நிலையே தொடருகிறது. இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி கூட்டம் முடிந்ததும் அறிவிப்போம். 1972-ம் ஆண்டு முதல் பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம்தான் அ.தி.மு.க. பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அ.தி.மு.க.வை ஜெயலலிதா வெற்றி பெற வைத்தார். தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காகவே மத்திய மந்திரியை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். மத்திய அமைச்சரிடம் கட்சி சார்ந்த விஷயங்கள் பற்றி பேசவில்லை என்றார்.