நெல்லை – சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Share
அதிவேகத்தில், உலத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசு பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 ரெயில்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நெல்லை-சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் 9 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.













